சென்னை: தமிழகத்தில் 754 கால்நடை உதவிமருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவதாக  தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் 1,141 கால்நடை உதவி மருத்துவர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. 1,141 கால்நடை உதவி மருத்துவர்களைத் தேர்வு செய்யும் பணி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறுகிறது. ஆனால், தற்போதைய நிலையில், தேர்வு முடிந்து பணி நியமனம் செய்ய சில மாதங்களாகும் என்பதால் தற்காலிகமாக உதவி மருத்துவர்கள் நியமிக்கப் படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,  கால்நடை உதவி மருத்துவர்கள் பணிக்கு, ஒப்பந்த அடிப்படையில் 754 கால்நடை உதவி மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு  மாதம் ரூபாய் 40,000 வீதம் 11 மாதங்களுக்குப் பணியாற்ற ஒப்பந்த அடிப்படையில் 754 கால்நடை உதவி மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.