விழுப்புரத்தில் இன்று மேலும் 76 பேருக்கு கொரோனா…

--

விழுப்புரம்:

விழுப்புரத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால்,  பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று (27ந்தேதி)  817 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18, 545 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரத்தில் நேற்று மும்பையில் இருந்து திரும்பியவர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று அறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 332ஆக உயர்ந்திருந்தது.

இந்த நிலையில்,   இன்று ஒரே நாளில் மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த 76 பேரும் மராட்டியத்தில் இருந்து விழுப்புரம் வந்தவர்கள் . இதனால் விழுப்புரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 408-ஆக உயர்ந்துள்ளது.