தமிழகத்தில் இன்று 765 பேருக்கு கொரோனா…! சென்னையில் மட்டும் 587 பேருக்கு பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 765 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 16,227 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 765 பேர்களில் சென்னையில் மட்டும் 587 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,576ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 8 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 111ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 833பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதால் கொரோனாவில் இருந்து தமிழகத்தில் மொத்தம் குணமாகியவர்களின் எண்ணிக்கை 8324 என உயர்ந்துள்ளது.

இதுவரை தமிழகத்தில் 11441 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தம் 391,252 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.