மோடியே திரும்பிப் போ: ஓசூரில் 77வயது முதியவர் கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

ஓசூரில் கருப்புகொடி காட்டிய 77வயது திமுக தொண்டர்

சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் கருப்புகொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 77வயதான  ஜே.வி.நாராயணனப்பா என்ற முதியவர் ஓசூரில் பிரதமரின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார். இது பார்ப்போரை வியப்புள்ளாக்கியது.

இன்று சென்னை வந்துள்ள மோடிக்கு எதிராக டுவிட்டரில் #Goback Modi என்ற ஹாஷ்டேக் உலக அளவில் டிரெண்டாகி உள்ள நிலையில், திமுக தீவிர விசுவாசியான நாராயணனப்பா மோடிக்கு எதிராக கறுப்புகொடி காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

77வயதான அவர் மோடிக்கு எதிராக முழக்கமிட்டு, காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வலியுறுத்தி கோஷமிட்டது பார்ப்போரை வியப்புக்குள்ளாகியது

இது காவிரி பிரச்சினையில்  கட்சியின் உண்மையான  எதிர்ப்புக்கு வலு சேர்ப்பதாகவும், உத்வேகம் அளிப்பதாகவும் திமுகவினர் கூறுகின்றனர்.

கார்ட்டூன் கேலரி