ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் 78 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து: ரயில்வே நிர்வாகம் தகவல்

டெல்லி: ஊரடங்கு காலத்தில் இருந்து நாடு முழுவதும் 78 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று எதிரொலியாக மார்ச் 24ம் தேதியிலிருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. ஆகையால் போக்குவரத்து முடங்கி இருக்கிறது. மார்ச் 25க்கு பின்னர் ரயில் சேவை ரத்து செய்யப்பட, முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுக்குக்கான பணம் திருப்பி தரப்பட்டது.

இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் இருந்து நாடு முழுவதும் 78 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த சேகர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியில் ரயில்வேயானது மேற்கண்ட தகவலை வெளியிட்டு உள்ளது.

ரயில்வே துறையானது அந்த பதிலில், மார்ச் 25 முதல் தற்போது வரை, 1 கோடியே 78 லட்சத்து 70 ஆயிரத்து 644 டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறி உள்ளது. மேலும் இதன் மூலம் 2727 கோடி ரூபாய் பயணிகளுக்கு திருப்பித் தரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.