‘உதான் 4.0’ திட்டத்தின் மூலம் திறக்கப்பட்ட புதிய விமான வழித்தடங்கள்!

புதுடெல்லி: ‘உதான் 4.0’ திட்டத்தின்கீழ்  78 புதிய விமானப் போக்குவரத்து பாதைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை, இந்தத் திட்டத்தின்கீழ் 766 வழிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம், வடகிழக்கில் உள்ள மலை மாநிலங்கள் மற்றும் தீவுகளுக்கான போக்குவரத்து மேம்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் புதிய வழிகள், அகாட்டி, கவரட்டி மற்றும் லட்சத்தீவிலுள்ள மினிகாய் தீவுகள் ஆகியவற்றை இணைக்கும்.

இந்த வழித்தடங்கள் குறித்த விபரங்களை தெளிவாக அறிய https://twitter.com/Supriya23bh/status/1298912534871719936?s=20 என்ற இணைப்பை சொடுக்கவும்.