17 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 78 வயது கிழவர்: மூன்றே வாரத்தில் விவாகரத்து

 

ஜகார்த்தா :

ந்தோனேஷியாவை சேர்ந்த பணக்கார முதியவரான அபா சர்னாவுக்கு 78 வயது ஆகிறது.

கடந்த மாதம் அவருக்கும் 17 வயதே நிரம்பிய நானி நவீதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.

ஆம். இருவருக்கும் இடையே 61 வயது வித்தியாசம்.

அந்த நாட்டில் மணமகன், மணமகளுக்கு வரதட்சணை கொடுப்பது வழக்கம்.

அபா சர்னாவும், தனது மனைவிக்கு மோட்டார் சைக்கிளும், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வரதட்சணையாக கொடுத்துள்ளார்.

“மணமக்கள்” ஜோடியாக எடுத்துக்கொண்ட பல போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களை பற்றிய இன்னொரு செய்தி இடியாக இறங்கியுள்ளது.

கல்யாணமான 22 நாளில் இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகி உள்ளனர்.

“அபா சர்னா குடும்பத்தாருக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை. எனவே அவர்கள் எங்கள் மகளை விவாகரத்துக்கு வலியுறுத்துகிறார்கள்” என நவீதாவின் பெற்றோர், சோக கீதம் இசைக்க, “மாப்பிள்ளை” வீட்டுக்காரர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

“திருமணத்துக்கு முன்பே நானி நவீதா கர்ப்பமாக இருந்தார். இதனை மறைத்து விட்டு, அவளை திருமணம் செய்து கொடுத்துள்ளனர்” என்பது அபா சர்னா குடும்பத்தினரின் குற்றச்சாட்டு.

இந்தோனேஷியாவில், இந்த மணமக்கள் குறித்த செய்திகளும், போட்டோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

– பா. பாரதி