கேரளாவில் புதியதாக 7,871 பேருக்கு கொரோனா தொற்று: 25 பேர் பலி

--

திருவனந்தபுரம்: கேரளாவில் புதியதாக 7,871 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் சுகாதாரப் பணியாளர்கள் 111 பேர் ஆவர். 25 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.

மேலும் 4,981 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். தற்போதைய நிலையில் 87,738 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று 5,042 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது இன்றைய பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது.