குஜராத் : பன்றிக்காயச்சலால் 79 பேர் மரணம்

கமதாபாத்

டந்த ஜனவரி 1 முதல் குஜராத் மாநிலத்தில் 79 பேர் பன்றிக் காய்ச்சலால் மரணம் அடைந்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் கடுமையாக பரவி வருகிறது. இதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குஜராத் நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தவே மற்றும் பைரன் வைஷ்ணவ் ஆகியோரின் அமர்வு குஜராத் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் குறித்த விவரம் அளிக்குமாறு மாநில அரசிடம் கேட்டிருந்தது.

குஜராத் மாநில அரசு அளித்த பதிலில், “குஜராத் மாநிலத்தில் கடந்த ஜனவரி 1 முதல் சுமார் 2000 பேருக்கு மேல் பன்றிக் காய்ச்சல் இருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது. இதில் 727 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 1497 பேர் பூரண குணம் அடைந்துள்ளனர். அத்துடன் பன்றிக் காய்ச்சலால் 79 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் குஜராத் மாநிலத்தில் அதிகம் பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே இதை தடுக்க தேவையான பல நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. அத்துடன் இதற்காக மத்திய அரசின் உதவியையும் மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.” என தெரிவித்துள்ளனர்.