கேரளாவில் முன் எப்போதும் இல்லாத உச்சம்: ஒரே நாளில் 791 பேருக்கு கொரோனா

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 791பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கேரளாவில் தொடக்கத்தில் கொரோனா தொற்று வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக நாள்தோறும் தொற்றுகளின் எண்ணிக்கை ஏறுமுகத்தில் உள்ளது.

இன்று ஒரு நாளில் மட்டும் புதிய உச்சமாக ஒரே நாளில் 791பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 11,066 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 6,029 பேராகும். இதுவரை 4,994 பேர் கொரோனாவிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பினர். மொத்த பலி எண்ணிக்கை 39 ஆக உள்ளது.