சசிகலா உறவினர் பாஸ்கரன் வீட்டில் 7 கிலோ தங்கம், பலகோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கின

சென்னை:

சசிகலா உறவினர் பாஸ்கரன் வீட்டில் 7 கிலோ தங்கம் மற்றும் பலகோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கின.

வி.கே.சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் வீட்டில் 7 கிலோ தங்கம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வி.கே. சசிகலாவின் குடும்பத்தினரை குறிவைத்து நேற்று முதல் 180 இடங்களுக்கும் மேலாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இன்று இரண்டாவது நாளாக வருமானவரி சோதனை நடந்தது.

சென்னை நீலாங்கரையில் உள்ள சசிகலாவின் அக்கா மகனும், தினகரனின் சகோதரருமான பாஸ்கரனின் வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத ஏழு கிலோ தங்கம் மற்றும் பல கோடி அளவுக்கு முறைகேடாக பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.