Random image

திருப்பதி பிரமோற்சவம் 7வது நாள்: சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சாமி வீதி உலா

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக கடந்த சில நாட்களாக  நடைபெற்று வருகிறது. இன்று 7வது நாள் விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இன்றைய விழாவில்  மலையப்ப சுவாமி சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையப்ப  சுவாமியை  தரிசித்து வருகின்றனர். தொடர்ந்து  இன்று இரவு சந்திர பிரபை வாகன வீதி உலா நடைபெற உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த ஒருவாரமாக விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினசரி லட்சகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் பெற்று வருகின்றனர்.

சுவாமி திருவீதி உலாவின் போது,   ஜீயர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடியபடியும்,  பக்தர்கள் பஜனை பாடல்களை பாடியபடி, கோலாட்டம், பரத நாட்டியம் ஆடிக்கொண்டு மாட வீதிகளில் வலம் வந்தனர். மாட வீதிகளில் நடந்த பல்வேறு கலை நிகழ்ச்சிகளை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு ரசித்தனர்.

மாட வீதியின் இரு புறத்திலும் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி சுவாமியை தரிசனம் செய்தனர்.

20-ந்தேதி காலை 7 மணியில் இருந்து 11 மணிவரை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா நடைபெற உள்ளது.

21-ந்தேதி காலை 7 மணியில் இருந்து 9 மணிவரை சக்கர ஸ்நானம் (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி), இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கொடியிறக்கத்தோடு பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.