இந்தியாவில் கொரோனாவை கண்டறிய இதுவரை 8.34 கோடி சாம்பிள்கள் சோதனை! ஐசிஎம்ஆர்

டெல்லி:  நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை  கண்டறிய இதுவரை 8.34 கோடி சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும், நேற்று ஒரே நாளில்,  11.94 லட்சம் சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும்  ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட 10 மாநிலங்களில் மட்டுமே தொற்று பரவல் தொடர்ந்து வருகிறது. உலகில் வேகமாக வைரஸ் பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சுகாதாரத்துறையின் இன்றைய தகவலின்படி  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,35,656 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 78,524  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி  1,05,526  ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்ட சாம்பிள்களின் எண்ணிக்கை  8,34,65,975  என்றும்,  நேற்று மட்டும் 11,94,321 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும்  ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.