தான்கோட்

மெரிக்க போயிங் விமான நிறுவனத் தயாரிப்பான  8 அபாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2015 ஆம் வருடம் அமெரிக்க விமான  நிறுவனமான போயிங் தயாரிக்கும் அபாச்சி ரக ஹெலிகாப்டர்கள் 22 ஐ வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் இட்டது. இந்த ஹெலிகாப்டர்கள் எவ்வித மோசமான வானிலையிலும் சிறப்பாகச் செயல்படக்கூடியது ஆகும். அத்துடன் இந்த அபாச்சி ரக ஹெலிகாப்டர்கள் மூலம் ஒரே நேரத்தில் பல்முனைத் தாக்குதலை நடத்த முடியும்.

இந்த ஹெலிகாப்டர்களில் முதல் 4 கடந்த ஜூலை 27 அன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு மேலும் 4 ஹெலிகாப்டர்கள் ஒப்படைக்கப்பட்டன. இந்த  எட்டு ஹெலிகாப்டர்களையும் இந்திய விமானப்படையில் இணைக்கும் பிரம்மாண்டமான விழா இன்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான் கோட்டில் நடந்தது.

இந்த விழாவில் 8 ஹெலிகாப்டர்களுக்கும் தேங்காய் உடைத்து பொட்டு வைத்து இந்திய விமானப்படையுடன் இணைக்கப்பட்டன. விரைவில் மேலும் 10 ஹெலிகாப்டர்கள் இணைக்கப்பட உள்ளதாக விழாவில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபாச்சி ரக ஹெலிகாப்டர்கள் ரஷ்யாவின் மிக் ரக விமானங்களுக்குப் பதிலாக இணைக்கப்படுவதாக விமானப்படை அறிவித்துள்ளது.