8 காங்- 7 மஜத எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக பாஜ வதந்தி: கர்நாடகாவில் பரபரப்பு

டில்லி:

ர்நாடக விவகாரத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடியூரப்பாவுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தங்களுக்கு 8 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 7 மதசார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக பாஜக தலைவர்கள் கூறுவதாக பாஜகவினர்  வதந்தி பரப்பி வருகின்றனர்.

கர்நாடக தேர்தல் முடிவுகளின்படி எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜ ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்து, எடியூரப்பாவுக்கு முதல்வராக பதவி பிரமாணமும் செய்து வைத்தார்.

இதை எதிர்த்து 117 எம்எல்ஏக்களின் ஆதரவை கொண்டுள்ள காங்., ஜேடிஎஸ் கட்சிகளின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை  இன்று உச்சநீதி மன்றத்தில் காரசாரமாக நடைபெற்றது. அப்போது பாஜ சார்பில் ஆஜரான முகுல்ரோத்தகி,  கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு பெரும்பாலான  எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது என்று கூறினார்.

ஆனால், அவர் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த கடிதத்தில் யாருடைய பெரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், எங்களுக்கு 8 காங்கிரஸ் மற்றும் 7 மஜத எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது என கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர் பாஜகவினர். இது கர்நாடகாவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தலைமறைவாக உள்ள நிலையில், பாஜகவின்ர் வதந்தி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

You may have missed