உ.பி.யில் ரவுடிகளால் 8 போலீசார் சுட்டுக்கொலை! முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல்

கான்பூர்:

உ.பி.யில் ரவுடிகளால் 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில உயிரிழந்த காவலர்களுக்கு  முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் குற்றவாளிகளை தேடிச் சென்ற போலீசாரை நோக்கி சரமாரியாக மர்ம நபர்கள் சுட்டதில் டி.எஸ்.பி., 3 உதவி ஆய்வாளர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ள னர்.  டி.எஸ்.பி., தேவேந்திர மிஸ்ரா, உதவி ஆய்வாளர்கள் மகேஷ் யாதவ், அனூப் குமார், பாபுலால், காவலர்கள் சுல்தான் சிங், ராகுல், ஜிதேந்திரா மற்றும் பாப்லூ ஆகியோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அறிந்த மாநில சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி., பிரசாந்த் குமார் சம்பவ இடத்திற்கு புறப்பட்டார். கான்பூர் எஸ்.பி., மற்றும் ஐ.ஜி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தனர்.

இச்சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரவுடிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட போலீசாரின் குடும்பத்துக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், டிஜிபி அவாஸ்திக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்