8 தமிழக மீனவர்கள் மீண்டும் சிறைபிடிப்பு! இலங்கை அடாவடி

ராமேஸ்வரம்,

லங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 8 பேரை மீண்டும் சிறைபிடித்துள்ளனர். இது மீனவ மக்களிடையே மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த 6ந்தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துகொண்டிதவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியதில் பிரிட்ஜோ என்ற தமிழக மீனவர்கள் துப்பாக்கி குண்டுக்கு பலியானார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தை தொடர்ந்து, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்யமாட்டார்கள் என்று உத்தரவாதம் அளித்தார்.

இந்நிலையில் நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

நாகையை சேர்ந்த 8 மீனவர்கள் நேற்று நெடுந்தீவு அருகே உள்ள கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன் பிடித்தாக கூறி, 8 மீனவர்களையும் கைது செய்தது.

‘மீனவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.

இலங்கை அரசின் இந்த அடாவடித்தனம் மீனவ மக்களிடையே மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.