திருச்சி : முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்து பாலத்தில் வெள்ளம்

திருச்சி

திருச்சி முக்கொம்பு மேலணையில் 8 மதகுகள் உடைந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருச்சி அருகில் உள்ள முக்கொம்பு மேலணையில் சுமார் 180 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பாலம் கட்டப்பட்டு போக்குவரத்துக்கு உபயோகப்படுத்தப் பட்டு வந்தது.    இந்த பாலம் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆனதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.   அதன் பிறகு இந்த வழியாக விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு செல்லவும் மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது.

நேற்று இரவு முக்கொம்பு மேலணையில் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.  அதை ஒட்டி இந்த பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.    அத்துடன் பாலத்தின் மீது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.    இந்தப் பகுதியில் அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.   போக்குவரத்து நிறுத்தப் பட்டதால் புனரமைப்பு பணிகள் உடனடியாக நடைபெறுவதில் தாமதம் உண்டாகி உள்ளது.    பாலத்தின் வழியாக செல்லும் விவசாயிகள் மற்றும் மாணவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.   இன்று காலை பொறியாளர் குழுவினர் இந்த இடத்தை ஆய்வு செய்ய உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.