8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

--

சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 8 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளராக மகேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நில சீர்த்திருத்தத்துறை இயக்குநராக லில்லி நியமிக்கப்பட்டு உள்ளார்.

பொதுத்துறை சிறப்பு செயலாளராக வெங்கடேசும், சட்டம், ஒழுங்கு துணை செயலராக அம்ரித், நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நிதித்துறை சிறப்பு செயலாளராக ரீட்டா ஹாரிஸ் தாக்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வணிக வரி கூடுதல் ஆணையராக லக்‌ஷ்மி பிரியாவும், வணிக வரி துணை ஆணையராக நார்ணவாரே மணிஷ் ஷங்கரோவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.