ராஜஸ்தானில் கட்டிடம் இடிந்து விபத்து: 8 பேர் சம்பவ இடத்தில் இடிபாடுகளில் சிக்கி பலி

ஜெய்பூர்: ஜோத்பூரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. விபத்தின் போது பணியில் இருந்த 14 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொள்ள, அவர்களில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

எஞ்சிய 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். பாதுகாப்பின்றி, விதிகளை மீறி கட்டுமான பணிகளை மேற்கொண்டதாக கட்டிட உரிமையாளர், ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அசோக் கெலோட் அறிவித்து உள்ளார்.