கெய்ரோ

கிப்து நாட்டு ராணுவ முகாமில் திவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 8 ராணுவ வீரர்களும் 14 தீவிரவாதிகளும் மரணம் அடைந்துள்ளனர்.

எகிப்து நாட்டில் முகமது மோர்ச்சி அதிபராக பதவி வகித்து வந்தார்.   கடந்த 2013 ஆம் வருடம் ராணுவம் அவரை பதவியில் இருந்து நீக்கியது.   இதனால் முகமது மோர்ச்சிக்கு ஆதரவாக ஐ எஸ் தீவிரவாதிகள் எகிப்து நாட்டின் ராணுவத்தினர் மீதும் காவல்துறையினர் மீதும் தாக்குதல்காள் நடத்தி வருகின்றனர்.

நேற்று எகிப்தில் உள்ள சினாய் பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.    தீவிரவாதிகள் தானியங்கி துப்பாக்கியால் சுட்டதால் 8 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர்.  மேலும் 15 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.   இந்த தாக்குதலில் மனித குண்டுகளாக செயல்பட இருந்த 4 தீவிரவாதிகள் உட்பட 14 பேர் மரணம் அடைந்தனர்.   இந்த மனித குண்டுகள் மூலம் முகாமையே அழிக்க தீவிரவாதிகள் திட்டமிட்டு இருக்கலாம் எனவும் ராணுவத்தினரால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.