10 மாத குழந்தை உள்பட மேலும் 8 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆனது

சென்னை: தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பீலா ராஜேஷ் இதனை அறிவித்து உள்ளார். அவர் மேலும் கூறி இருப்பதாவது;

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 8 பேரும் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள். அதில், 10 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

இந்த அறிவிப்பின் மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 43,538 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த விவரங்கள் அனைத்தும் சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. முன்னதாக டுவிட்டர் வெளியிட்டு இருந்த அமைச்சர் விஜயபாஸ்கர், ஒருபுறம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் இருவர் இன்று குணமடைந்திருப்பதாக தெவித்திருந்தார். அவர்கள் அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.