பாகிஸ்தான்: பயங்கரவாதிகள் தாக்குதலில் 8 போலீசார் பலி

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில் போலீசாரை பணிக்கு ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் இன்று வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் 8 போலீசார் பலியாகினர். 15-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

தொடர்ந்து குவெட்டா நகரின் எல்லையில் பயங்கரவாதிகள் நடத்திய மற்றொரு தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர்.