Random image

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை:

மு.க.ஸ்டாலின் திமுக தலைவரான பிறகு இன்று முதன்முறையாக நடைபெற்ற திமுக மாவட்ட செயலார்கள் கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ‘

அதில், பாஜ மத்தியஅரசின் காவி மயத்தை அகற்றுவோம் என்றும், தமிழகஅரசுக்கு எதிராக வரும் 18ந்தேதி ஆர்ப்பாட்டம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்துக்குப் பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் திண்டுக்கல் பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் 65மாவட்டச் செயலாளர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.

கட்சியில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது, மாவட்டந்தோறும் கட்சியை வலுப்படுத்துவது, வாக்காளர் பட்டியலில் ஆட்களைச் சேர்க்கும் பணி, திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை எதிர்கொள்வது, உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றுக்குத் தயாராவது ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டட்டன.கூட்டத்தின் முடிவில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் தாமதமின்றி விடுவிக்க வேண்டும்

2) காவிமயமாக்கும் மத்திய பாஜக அரசின் கனவுகளை நிராகரித்து வீழ்த்துவோம்

3) கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் உடனடியாக செல்லவும், வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை தேவை

4) தமிழகத்தில் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியை பின்பற்ற வலியுறுத்தல்

5) குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

6) பெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வுக்கு எதிராக செப்.,10ல் நடக்கும் பாரத் பந்த் வெற்றிபெற ஒத்துழைப்போம்

7) தமிழக அரசுக்கு எதிராக செப்.18ம் தேதி மாவட்ட தலைநகரங்களில்
கண்டன ஆர்ப்பாட்டம் உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா,  தமிழ்நாட்டில் உள்ள அரசு மக்கள் விரோத அரசு. ஆக்கப்பூர்வமான பணிகள் நடைபெறவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் கூட்டத்தில் மு.க.அழகிரி குறித்து எதுவும் பேசப்படவில்லை என்றவர்,  தீர்மானங்கள் குறித்தே பேசினோம்  என்று தெரிவித்தார்.