டில்லி

ன் டேக் ஒன் நேஷன் என்னும் திட்டத்தின் கீழ் எட்டு மாநில சாலை உரிமையாளர்கள்  தேசிய நெடுஞ்சாலைத்துறையுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோர் ஆங்காங்கே சுங்கச்  சாவடிகளில் நிறுத்தப்பட்டு கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.   இதனால் பலர் காத்திருப்பதில் தங்கள் பயண நேரம் வீணாவதாகத் தெரிவித்துள்ளனர்.   அத்துடன் சரக்கு லாரிகளும் இந்த சுங்கச்சாவடிகளால் காத்திருப்பதால் குறித்த நேரத்தில் சரக்குகளைக் கொண்டு சேர்க்க முடியாத நிலை உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத்துறை இதைப் போக்க ஆலோசனை செய்து வந்தது.   ஆலோசனையின் ஒரு அட்டை ஒன்றை அமைத்து அதன் மூலம் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நில்லாமல் செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ஒன் டேக் ஒன் நேஷன் (ஒரே அட்டை – ஒரே நாடு) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

முதலில் இந்த அட்டைகள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தன.  தற்போது தேசிய நெடுஞ்சாலைத் துறை இதைப் பிரி பேய்ட் ஆக மாற்றி உள்ளது.   இந்த அட்டையின் மூலம் அனைத்து சாலைகளிலும் சுங்கச் சாவடியில் நிற்காமல் செல்வதன் மூலம் நேரம் மிச்சமாகும் எனக் கூறப்படுகிறது.

தற்போது இந்த திட்டத்தின் கீழ் எட்டு மாநில சாலை உரிமையாளர்கள் தேசிய நெடுஞ்சாலைத துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை இட்டுள்ளனர்   இந்த ஒப்பந்தத்தின் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமின்றி இந்த ஒப்பந்தத்தின் கீழ் வரும் மாநில சாலைகளிலும் இந்த அட்டையை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த திட்டத்தில் இணைந்துள்ள நிறுவனங்கள், உத்திரப் பிரதேச எக்ஸ்பிரஸ் வே மேம்பாட்டுக் குழு, மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டு வாரியம், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு வாரியம்,  ஆந்திரா சாலை மேம்பாட்டு வாரியம், அரியானா பொதுப்பணித்துறை, கர்நாடக பொதுப்பணித்துறை, மற்றும் கர்நாடகா சாலை மேம்பாட்டு வாரியம் ஆகும்.   இதைத் தவிர அரியானா, பஞ்சாப், தெலுங்கானா மற்றும் ஆந்திரா ,ஆகிய மாநில பொதுப்பணித்துறையும் இந்த ஒப்பந்தத்தில் இணைகின்றன.