எல்லை தாண்டியதாக 8 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை நடவடிக்கை

தூத்துக்குடி:

ல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக அவ்வப்போது இலங்கை குற்றம் சாட்டி கைது செய்து வருகிறது. பின்னர் இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று விடுதலை செய்வதும் மீண்டும் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த பிரச்சினை குறித்து இந்திய இலங்கை மீனவர்கள் மற்றும் அரசு தரப்பில் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றும் முடிவுபெற முடியாத நிலையே நீடித்து வருகிறது.

இதற்கிடையில், ல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு அதிக அளவிலான அபராதம் விதிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் சட்டம் கொண்டு வந்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  இலங்கையின் அரிப்பு என்னும் இடத்திலிருத்து 16 நாட்டிங்கல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களது படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படையில் அபரிகத்து சென்றுள்ளனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததால் அவர்களைக் கைது செய்ததாக அந்நாட்டுக் கடற்படை கூறியுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள், இலங்கை  கடற்படை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ சோதனை செய்யப்பட்டுள்ளது. பின் அவர்கள் புட்டாலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செப்டம்பர் 3ஆம் தேதி (இன்று) வரை காவலில் வைக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட  மீனவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி