லட்சத்தீவு சிறையில் இருந்த 8 தமிழக மீனவர்கள் விடுவிப்பு

உரிய ஆவணங்கள் இன்றி மீன் பிடித்ததாக லட்சத்தீவு சிறையில் இருந்து 8 குமரி மீனவர்கள், விடுதலை செய்யப்படுள்ளனர்.

Fishermen of the Arabian Sea – Hundreds of rustic little fishing villages lie along the dark sands of the Arabian Sea. Through the short hours around dawn to the golden sunset at dusk, the fathers of the traditionally large Indian families are busy both at sea and on the mainland, heaving and weaving, mending and pushing. Meanwhile, the women keep them well fuelled with sweet warm ‘chai’ and are ready to sort through the days catch before lurking it up to the village

கடந்த மே மாதம் தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க 8 மீனவர்கள் படகு ஒன்றில் சென்றுள்ளனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கடலுக்குள் மீன் பிடிக்க வந்ததாக கூறி, கடலோர காவல்படையினர், மீனவர்களை கைது செய்து, லட்சத்தீவு சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பாக மீனவர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு தரப்பில் மத்திய அரசுக்கு, மீனவர்களை விடுவிக்க கோரி கடந்த மாதம் கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, சிறைபிடிக்கப்பட்டிருந்த 8 மீனவர்களும், விடுவிக்கப்பட்டுள்ளனர்.