Random image

ஒரு நாளைக்கு 8ஆயிரம் வாகனங்கள் பதிவு: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சென்னை:

மிழக சட்டபேரவையில் இன்று போக்குவரத்து துறை மானிய கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்றது.

அப்போது, தமிழகத்தில் ஒரு நாளைக்கு சுமார் 8 ஆயிரம் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுவ தாக போக்குவரத்து துறை அமைச்சர்  தெரிவித்தார்.

இன்று சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின்போது,  பேருந்து கட்டண உயர்வுக்கு பதில் தெரி வித்த அமைச்சர் விஜயபாஸ்கர்,  டீசல் விலை உயர்வு, ஊழியர்கள் சம்பளம் போன்ற காரணங் களால்  பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,  தமிழகத்தில் ஒரு நாளில் சுமார் 8,000 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுவதாக கூறினார்.

ஒரு நாளில் அதிகளவு புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாமிடம் வகிப்பதாகவும் அவர்  தெரிவித்தார்.