Random image

மரங்களை வெட்டினால் 8 வழிச் சாலை திட்டத்துக்கு தடை….உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை

மரங்களை வெட்டினால் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்கப்படும் என்று உயர்நீதிம்னறம் எச்சரித்துள்ளது.

சென்னை&சேலம் 8 வழிச்சாலைக்கு எதிரான பொதுநல வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘8 வழிச்சாலைக்காக மரங்களை வெட்டப்படுவது குறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும். சமூக பாதிப்பு மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை எந்த நிலையில் உள்ளது?.

8 வழிச்சாலைக்கு மரங்களை வெட்ட கூடாது என்ற உத்தரவை மீறினால் மொத்த திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் 109 மரங்கள் வெட்டப்படுவது கண்டத்திற்குறியது’’ என்று தெரிவித்தனர்.

சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்வதாக ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.