8 வழி சாலை: அப்பட்டமான காப்பி

சென்னை சேலம் 8வழி நெடுஞ்சாலைக்கான “செயலாக்க அறிக்கை” (feasibility report), மற்ற திட்டங்களின் அறிக்கைகளில் இருந்து திருடப்பட்ட தரவுகளுடன், இந்த திட்டத்திற்கு தேவையே இல்லாத தகவல்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. வெறும் பக்கங்களை நிரப்புவதற்காக மட்டுமே மேற்சொன்ன தரவுகளுடன் அறிக்கையை தயார் செய்திருக்கிறார்கள்.

ஒரே ஒரு உதாரணம்: –

இந்த அறிக்கையின் 11 அத்தியாயத்தில் “பாகுபாடற்ற பாலின வளர்ச்சி” குறித்த 11.7 பிரிவில் உள்ள கேள்வி ஒன்றிற்கு பதில் இவ்வாறாக உள்ளது.

 

“இந்த திட்டம் நகரங்களுக்கு செல்லக்கூடிய சாலை வசதிகளை, பொதுபோக்குவரத்தை மேம்படுத்துவதன் மூலம் ஆண்கள் பெண்கள் என இருபாலாருக்கும் சமமாக பயனுள்ள திட்டமாக அமையும். “Xi”an பகுதியில் பெண்கள் இடம்பெயர்தல் ஏற்கனவே அதிகமாக உள்ளது, இந்த திட்டம் அவர்களுக்கான போக்குவரத்து சேவையின் தரத்தையும் பாதுகாப்பையும் மேம்படுத்தும்”.

இதில் நாம் குறிப்பாக கவனிக்கவேண்டியது, “Xi”an நகரம் சீனாவில் Shaanxi மாநிலத்திலுள்ள நகரம். ஆச்சரியம் என்னவென்றால், சென்னை சேலம் நெடுஞ்ச்சாலை வெகுதொலைவிலுள்ள சீன தேசத்தின் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதுதான். அந்த நகரத்திற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையிலிருந்து ” தரவுகளை திருடுவது” என்று முடிவெடுத்துவிட்டால் “ஊர் பெயரைக்கூட” மாற்றுவதற்கு முடியவில்லை.

அரசு சொல்வதைப்போல சென்னை- சேலம் 8 வழிச்சாலை முக்கியமான திட்டமென்றால், நம்பத்தகுந்த, விஞ்ஞானபூர்வமான தரவுகளின் அடிப்படையில் தகவல் பொதுவெளியில் பகிரப்பட வேண்டும்.