Random image

‘8வழிச்சாலை’… இனி ‘சூப்பர் வழிச்சாலை’: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை:

சென்னை சேலம் 8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்ததால், இனி இது சூப்பர் வழிச்சாலை என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.

சென்னை சேலம் இடையே அமைக்கப்பட உள்ள 8 வழிச்சாலைக்கு அந்த பகுதி மக்கள் கடுமையான போராட் டங்கள் நடத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 8 வழிச்சாலையால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால், பெரும்பாலான அரசியல்  கட்சிகள் 8 வழிச்சாலைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில்  செய்தியாளர்களை சந்தித்த, நடிகர் ரஜினிகாந்த் 8 வழிச்சாலை தமிழகத்துக்கு தேவை என்று கூறினார்.

மேலும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்றவர், மக்களவைக்கும் சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடப்பது நல்லது என்று பாஜகவின் ஊதுகுழலாகவே  தனது கருத்தை தெரிவித்தார்.

நாட்டின் வளர்ச்சிக்கு 8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை என்ற ரஜினிகாந்த், சென்னை – சேலம்  8 வழி சாலை போன்ற பெரிய திட்டம் வந்தால் நாடு முன்னேறும், தொழில் வளர்ச்சி பெருகும் என்றும்,  சக்திவாய்ந்த லோக் ஆயுக்தா இயங்கினால் சிறப்பாக இருக்கும் என அவர் கூறினார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த்துறை  தமிழக வருவாய்த்துறை அமைச்சர்  ஆர்.பி. உதயக்குமார்,  8 வழிச்சாலைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்து உள்ளதால், இனி அது சூப்பர் வழிச்சாலை என்று கூறி உள்ளார்.

அதிமுக ஆட்சி கவிழும் எனக்கூறியவர்கள் தற்போது கவிழ்ந்து கிடக்கிறார்கள் என்றும், தொண்டர்களை உற்சாகப்படுத்தவே தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளதாக அமித்ஷா பேசியுள்ளார் என்ற அமைச்சர,  பாஜக பொதுக்கூட்டத்தில் அதிமுக அரசின் சாதனையை பற்றி அமித்ஷா எப்படி பேசுவார்? என்றும் கேள்வி எழுப்பினார்.

அதிமுக அமைச்சரின் இந்த பேச்சு, போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.