வாஷிங்டன்: 8 வயது சிறுவன் ஒருவர் யூடியூப் சேனல் மூலம் ஈட்டும் வருவாய் உலகையே மூக்கின் மேல் விரல் வைக்க வைத்துள்ளது. அவரின் பெயர் போர்ப்ஸ் பத்திரிக்கையிலும் இடம்பெற்றுள்ளது.

அந்த சிறுவனின் பெயர் ரியான் காஜி. அவரின் பெற்றோர் கடந்த 2015ம் ஆண்டு ‘ரியான் வேர்ல்ட்’ என்ற யூடியூப் சேனலைத் துவக்கினர். இதில் தொடக்கத்தில் சில வீடியோக்களை வெளியிடத் துவங்கினர் ரியானின் பெற்றோர்கள்.

சிறிதுசிறிதாக பார்வையாளர்களை ஈர்த்த இந்த சேனலுக்கு தற்போது உலகெங்கிலும் ஏராளமான கோடி பார்வையாளர்கள் உள்ளனர். இந்த சேனலில் காட்டப்படும் ரியான் விளையாடும் பொம்மைகள் குறித்த விமர்சனத்திற்காக, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஸ்பான்சர் தொகையை வழங்கியுள்ளன.

ஆனால், விமர்சன வீடியோவில் ஸ்பான்சர் செய்யப்பட்டது தொடர்பாக எழுந்த சிக்கலால், இந்த சேனலின் பெயர் ‘ரியான் ஏஜஸ்’ என்று மாற்றப்பட்டது.

இதில் உயர்கல்விக்கான வீடியோக்கள் வழங்கப்படுகின்றன. வெறும் 8 வயதேயான அந்த சிறுவன் 2019ம் ஆண்டு ஜுன் 1 வரையிலான காலகட்டத்தில் ரூ.158.48 கோடி வருவாய் ஈட்டியுள்ளார்.