குண்டு காயத்துடன் தப்பி ஓடிய புலி சிறுவனை கொன்றது…

 

கர்நாடக மாநிலம் கொடகு பகுதியில் கடந்த இரண்டு வாரமாக பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் புலி ஒன்று நடமாடி வருகிறது. மனிதர்களை அடித்து உண்ணும் அந்த புலியை வேட்டையாட வனத்துறை முடிவு செய்தது.

குறி பார்த்து சுடும் வீரர்களை தேர்வு செய்து, புலியை சுடும் பணிக்கு அமர்த்தியது.

துப்பாக்கி சுடும் வீரர்களும் அந்த புலியை சுட்டனர்.

குண்டு காயத்துடன் அந்த புலி தப்பி ஓடியது.

Image Credit : DH

அங்குள்ள பெல்லூரு என்ற கிராமத்தில் எஸ்டேட் வேலையில் ஈடுபட்டிருந்த பெண்ணுடன் சென்ற 8 வயது சிறுவனை காயம் பட்ட புலி தாக்கியுள்ளது.

படுகாயம் அடைந்த ரங்கசாமி என்ற அந்த சிறுவன் மருத்துவமனையில் இறந்து போனான்.

தப்பி ஓடிய புலியை பிடிக்க வனத்துறையினர், ரோந்து சுற்றி வருகிறார்கள்.

– பா. பாரதி