பாலியல் குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த 8 வயது சிறுவனின் சாட்சியம்..

 

புதுடெல்லி :

டெல்லியில் டாக்சி டிரைவராக இருப்பவர் சலீம். சவாரி சென்றபோது சாலையில் பார்வையற்ற 18 வயது சிறுமியும், அவரின் 8 வயது தம்பியும் நடந்து சென்று கொண்டிருந்ததை சலீம் பார்த்துள்ளான்..

இருவரையும் வீட்டில் இறக்கி விடுவதாக ஏமாற்றி தனது காரில் ஏற்றிச் சென்றுள்ளான்..

ஆள் அரவமற்ற இடத்தில்,அந்த சிறுமியை அவரது தம்பியின் கண் முன்னே, சலீம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

2013-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கு அங்குள்ள கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் சிறுமியின் 8 வயது தம்பி முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தான்.

வழக்கு விசாரணையின் போது, அந்த டிரைவரையும், அவரது காரையும் அடையாளம் காட்டிய சிறுவன், நடந்த சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் விவரமாக கூறினான்.

பலாத்காரத்துக்கு ஆளான சிறுமியும், சிறுவன் அளித்த சாட்சியமும் ஒத்துபோனதால், சலீமுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

– பா.பாரதி