ம.பி.யில் 8வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தறுக்கப்பட்ட கொடூரம்: குற்றவாளி கைது

இந்தூர்:

த்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் மான்ட்சர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த 8 வயது சிறுமி, காமூகன் ஒருவனால் கடத்திச்செல்லப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தறுக்கப்பட்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் மற்றும் போலீஸ் நாய் உதவியுடன் 24 மணி நேரத்தில் குற்றவாளியான 20வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.

சம்பவத்தன்று மாலை மான்ட்சர் பள்ளிச்சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து வீட்டுக்குச்செல்ல அருகிலிருந்த பஸ் நிறுத்தத்தில் சீரூடையில் நின்றுகொண்டிருந்தபோது மர்ம நபரால் கடத்திச்செல்லப்பட்டு, அங்கிருந்து 31 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு குளம் பகுதியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை மாலை இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. தற்செயலாக குளக்கரை பகுதிக்கு சென்ற அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிலர்,  அங்கு பள்ளிச்சீருடையில் சிறுமி ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு ஏராளமான  ரத்தம் வெளியேறிய நிலையில்  உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர். உடடினயாக  அந்த சிறுமியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் உடடினடியாக  போராட்டத்தில் குதித்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டும், மோப்ப நாய்  உதவியுடனும் குற்றவாளியை தேடி வந்தனர்.

இறுதியின் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது அந்த பகுதியை சேர்ந்த கான் என்ற 20 வயது இளைஞர் என்பது தெரிய வந்தது. அவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறுமி பள்ளி முடிந்ததும், தனது தந்தையின் வரவுக்காக காத்திருந்தபோது, குற்றவாளியான கான் என்பவர் அந்த குழந்தையை கடத்திச்சென்று கற்பழித்து, குழந்தையின் கழுத்தை கூர்மையான ஆயுதம் கொண்டு அறுத்து கொலை செய்திருப்பது விசாரணையில்  தெரிய வந்துள்ளது.

கழுத்தறுக்கப்பட்ட நிலையில், அருகில் உள்ள எம்ஒய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாகவும், அந்த 8 வயது சிறுமியை காமூகன் பலாத்காரப்படுத்தி கழுத்தை அறுத்து உள்ளதால், அந்த குழந்தையின் மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும், கூர்மையான ஆயுதம் கொண்டு குற்றவாளி குழந்தையின் கழுத்தில் அறுத்திருப்பதால், அவரது கழுத்தில் ஆழமான வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த பிஞ்சு குழந்தையின்  ரல் வளையில் சேதமடைந்து இருப்பதாகவும் தெரிவித்த மருத்துவர்கள், உடனடியாக மருத்துவர்கள் குழுவுடன் இணைந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர். உயிருக்கு ஆபத்ததான நிலையிலேயே அந்த சிறுமிக்கு சிகிச்சை தொடர்வதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த சம்பவம் காரணமாக குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்றும், காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும், அந்த சிறுமி படித்த பள்ளிக்குழந்தைகள் தங்களது கைகளை கருப்பு துணியால் கட்டி அமைதியான வழியில் போராட்டமும், சிறுமி உயிர்பிழைக்க வேண்டும் என்று பிரார்த்தனையும் செய்தனர்.

அந்த பகுதி மக்கள், குற்றவாளியை தூக்கில் போட வேண்டும் என்றும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பெரும் பரபரபபை ஏற்படுத்தி உள்ள இந்த கொடூர சம்பவம் காரணமாக கைது செய்யப்பட்டுள்ள கான் என்ற இளைஞரின் தந்தை இர்பான் கூறும்போது, இந்த கொடூர குற்றத்தை செய்தவனை தூக்கில் போடுங்கள் என்று ஆவேசமாக கூறினார்.

இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் இன்னும் பரபரப்பு நிலவி வருகிறது. அந்த பகுதியில் காவல்துறை யினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தெரிவித்த காவல்துறை அதிகாரி, குற்றவாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும்,  அவர் மீது கடத்தல் மற்றும் பாலியல் பலாத்காரம் பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்று கூறி உள்ளார்.