ஏமன் உள்நாட்டுப் போர் : பஞ்சத்தில் வாடும் 80 லட்சம் பேர்

னா

மன் நாட்டில் சியா மற்றும் சன்னி பிரிவினரிடையே உள்ள உள்நாட்டுப் போரினால் மக்கள் கடும் துயருற்றுள்ளனர்.

ஏமன் நாட்டின் அதிபர் சன்னி பிரிவை சேர்ந்த இஸ்லாமியர் ஆவார்.  ஏமனில் சியா இஸ்லாமியர் பிரிவை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் அதிபருக்கு எதிராக உள்நாட்டுப் போர் நிகழ்த்தி வருகின்றனர்.  கடந்த 2015 முதல் இந்த போர் நிகழ்ந்து வருகிரது.   அதிபருக்கு ஆதரவாக சவுதி அரேபியா தாக்குதல் நடத்தி வருகிறது.   கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ஈரான் தாக்குதல் நடத்துகிறது.

இந்த உள்நாட்டுப் போர் சில காலம் ஓய்ந்திருந்ததால் மக்கள் சற்றே நிம்மதி அடந்தனர்.   ஆனால் மீண்டும் தற்போது உள்நாட்டுப் போர் தொடங்கி உள்ளது.  கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள ஹோடைடா விமானநிலையத்தை மீட்க சௌதி அரேபியா வான் வழி தாக்குதல் நடத்தி வருகிறது.  இதனால் அந்தப் பகுதி முழுவதும் தாக்குதல் தொடர்கிறது.

ஏமன் உள்நாட்டுப் போரால் சுமார் 85 லட்சம் மக்கள் தவித்து வருவதாக ஐநா சபை கவலை தெரிவித்துள்ளது.   தலைநகர் சனாவை சுற்றி உள்ள 80 லட்சம் பேர் பஞ்சம் மற்றும் பட்டினியால் வாடி வருகின்றனர்.   நாட்டில் அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளதால் அவர்களுக்கு எங்கிருந்தும் நிவாரண உதவி கிடைக்க வாய்ப்பில்லாமல் உள்ளது.