சென்னை,

த்தியஅரசு கொண்டு வந்துள்ள மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவது தடை சட்டத்தின் காரணமாக தமிழகத்தில் மாடுகள் விற்பனை 80 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் கூறி உள்ளனர்.

தமிழ்நாட்டில் பல இடங்களில் மாடுகள் விற்பனை செய்யப்பட்ட வரும் சந்தைகள் இயங்கி வருகிறது. இங்கு மாடுகள் விற்பனை செய்யப்படுவதும், வாங்குவதும் நடைபெற்று வருவது வழக்கம்.

தற்போது நாடு முழுவதும் மத்தியஅரசு  கொண்டுவந்துள்ள சட்டத்தின் காரணமாக மாடுகள் விற்பனை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏழை விவசாயிகள் கடும் பாதிப்பு உள்ளாகி வருகின்றனர்.

ஏற்கனவே தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான விவசாயிகள் இறந்து வரும் நிலையில், தற்போது வயதான மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்யவும், அவசர தேவைக்காக மாடுகளை விற்பனை செய்யவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வேலூரில் வழக்கமாக நடைபெற்று வரும்  பிரபலமான ‘பொய்கை’ வாராந்திர மார்க்கெட்டில்,  8 லிட்டர் பால் கொடுக்கும் மாடுகள் விற்பனை செய்யப்பட்டு வரும். வாரம் ஒன்றுக்கு சுமார் 65,000 மற்றும் ரூ 85,000 வரை மாடுகள் விற்பனை செய்யப்படும்.

வேலூர் நகரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் உள்ளது பொய்கை மாட்டுச்சந்தை. இங்க  தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் கால்நடை வணிகர்களுகள் வந்து மாடுகளை வாங்கிச் செல்வது வழக்கம்.

தற்போது மத்திய அரசின் தடை காரணமாக மாடுகளை வாங்க வியாபாரிகள் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் தற்போது மாடுகளை வாங்குவதற்கு யாரும் வரவில்லை என்று சந்தைக்கு வந்த 55வயதான விவசாயி ஒருவர் கூறியுள்ளார்.

கதிரவன் என்ற விவசாயி கூறும்போது, கடந்த  20 ஆண்டுகளாக தான் கால்நடைகள் வளர்த்து விற்று வருகிறேன். தற்போது ஆறு பசுக்கள் மற்றும் மூன்று எருதுகளுடன் சந்தைக்கு வந்திருக்கிறேன். ஆனால் ஒரு மாட்டைகூட விற்க முடியவில்லை என்றும், அவற்றை மீண்டும்  வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும்  என்றும், மாடுகளை ஏற்றிவந்த போக்குவரத்து செலவு மட்டும் எனக்கு ரூ 2,500 செலவாகி உள்ளது என்று பரிதாபமாக கூறினார்.

இந்த வார சந்தைக்கு மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்த பல விவசாயிகள், மாடுகளை கொண்டுவர ஆயிரக்கணக்கான ரூபாக்களை போக்குவரத்துக்காக செலவழித்து வந்துள்ளதாகவும் ஆனால், மாடுகளை விற்பனை செய்ய முடியாமல் திரும்பி செல்வதாகவும் சோகமாக கூறினர்.

கடந்த வாரம் வரை வேலூர் பொய்கை மாட்டுச் சந்தையின் மொத்த வருவாய் ரூ. 80 லட்சம் ஆகும். ஆனால், இந்த வாரம் வெறும் 11.5 லட்சம் ரூபாய்தான் என்று மாட்டுச்சந்தை நிர்வாகம் கூறியுள்ளது.

 

வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான திருப்பத்தூர், ஜோலார்பேட்டை மற்றும் அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் கால்நடைகளை வளர்த்து  விற்பனை செய்து வருகின்றனர்.

இதுவே அவர்களின் பிரதான தொழிலாக இருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த முதியவர் கூறினார்.

இங்குள்ள மக்கள் முழுமையாக மாடுகளை விற்பனையை  சார்ந்திருப்பதாகவும், இதற்காக அவர்கள் தினம் 10 மணி நேரம் ஆடுமாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து செல்கிறார்கள் என்றும், வறட்சியான இந்த பிரதேசத்தில் விவசாயிகளுக்கு கால்நடைகளின் விற்பனை மட்டுமே நிதி ஆதாரமாக இருந்தது என்று கூறினார்.

விவசாயிகளின் வயற்றில் தொடர்ந்து மண்ணை அள்ளி போட்டுவருகிறது மோடி அரசு என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.