கோவை,

மிழகத்தில் 800 போலி மருத்துவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.

இன்று கோவையில் ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

தமிழகம் தொடர்ந்து உறுப்புதானத்தில் இந்திய அளவில் முதலிடம் வகித்து வருகிறது. கோவை அரசு மருத்துவ மனையில் 4 பேருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமான நடைபெற்றுள்ளது. அரசு மருத்துவர்கள் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளனர். கோவை மருத்துவமனைக்கு, பிளாஸ்டிக் சர்ஜரிக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்றார்.

மேலும், கடந்த சில மாதங்களாக நடைபெற்ற சோதனையில், இதுவரை 800 போலி மருத்துவர்கள் கண்டுபிடிக்கப் பட்டு அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எம்.பி.பி.எஸ் படிக்காமல் மருத்துவம் பார்த்தது தெரிய வந்தது. மேலும், மருத்துவம் படிக்காமல், மருத்துவ தொழில் செய்பவர்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும், கோவை அரசு மருத்துவமனைக்கு,  ஜெயிக்கா என்கிற திட்டத்தில் 280 கோடி நிதி வழங்கப்பட்டு அதி நவீன கருவிகள் வாங்கப்பட்டுள்ளதாகவும்,  தமிழகம் முழுவதும் 23 கோடியே 50 லட்சம் மதிப்பில் 837 செல்கவுண்டர்கள் தொடங்கப்பட்டுள்ளது,  இதன் மூலம் ரத்தத்தில் உள்ள வெள்ளை, சிவப்பு அணுக்களை குறைந்த நேரத்தில் கணக்கிட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.