மாணவர்கள் பதிவேடு மிகக்குறைவு: தமிழகத்தில் 800 அரசு பள்ளிகள் மூடப்படுகிறது?

--

சென்னை :

மிழகம் முழுவதும் மாணவர்கள் குறைவாக உள்ள 800 அரசு பள்ளிகளை மூட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

கடந்த ஆண்டும் இதுபோல தகவல்கள் பரவிய நிலையில், பள்ளிகள் முடப்படாது என்று அரசு அறிவித்தது.  ஆனால், இந்த வருடம் கண்டிப்பாக இந்நிலையில் இந்த ஆண்டு 800 பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டு, மாணவர்கள் இல்லாத பள்ளிக்கூடம் மற்றும் கட்டிடங்கள் மோசமான பள்ளிக்கூடம் போன்றவை கண்கெடுக்கப்பட்டு வந்ததாகவும், அதைத்தொடர்ந்து இந்த கல்வி ஆண்டில் அதுபோன்ற பள்ளிகளை மூட அரசு முடிவு செய்திருப்பதாகவும்  பள்ளிக்கல்வித்துறை வட்டார தகவல்கள் உறுதி செய்கின்றன.

ஏற்கனவே மாணவ மாணவிகள் தனியார் பள்ளிகளை நோக்கி செல்லும் நிலையில், பல அரசு பள்ளிகள் ஒற்றைப்படை இலக்க மாணவ மாணவிகளுடனேயே செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளை அருகில் உள்ள அரசு பள்ளியில் சேர்த்து, அந்த பள்ளிக்குசெல்ல மாணவ மாணவிகளுக்கு தேவையான போக்குவரத்து வசதி செய்துகொடுக்கவும் அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதுபோன்று தமிழகம் முழுவதும் 800 பள்ளிகள் மூடப்படும் அபாயம் இருப்பதாகவும், இதில் சென்னையிலும் பல பள்ளிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மூடப்படும் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகளுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக இதுவரை ஒருசில மாணவர்களை வைத்துக்கொண்டு காலத்தை ஓட்டி வந்த பெரும்பாலான ஆசிரிய பெருமக்கள் செய்வதறியாது உள்ளதாகவும், அரசின் இந்த திட்டத்தை தடுக்க ஆசிரியர்கள் சங்கம் மூலம் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.