இந்தியாவில் தடுப்பு மருந்து உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஸீரம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அடார் பூனாவாலா  ”கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யவும், இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் விநியோகம் செய்யவும் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தேவைப்படும். அது மத்திய அரசிடம் உள்ளதா?,” என கேள்வி எழுப்பினார். உலக அளவில் அதிக தடுப்பு மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஸீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆக்ஸ்போர்ட் நிறுவன கண்டுபிடிப்பான கொரோன தடுப்பு மருந்து உட்பட பல்வேறு கொரோனா தடுப்பு மருந்துகள் உற்பத்தியை இந்த நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா தடுப்பு மறுத்து கண்டுபிடிப்பு, தயாரிப்பு  மற்றும் விநியோகம் எய்வதில் உள்ள சவால்களை குறிப்பிட்டு பேசிய அடார் பூனாவாலா கடந்த சனியன்று இந்தக் கேள்வியை டிவிட்டரில் எழுப்பியுள்ளார். கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. இந்த வரிசையில், பிரிட்டனைச் சேர்ந்த, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து, மருத்துகள் உற்பத்தி நிறுவனமான  அஸ்ட்ராஜெனிகா தயாரித்து வரும் தடுப்பு மருந்து மூன்றாம் கட்ட மனித  பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் இந்த மருந்தின் பரிசோதனை, தயாரிப்பு மற்றும் வினியோகப் பணிகளை ஏற்றிக் கொண்டுள்ள ஸீரம் நிறுவனம் அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளது. சமீபத்தில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஒப்புதலை பெற்றுள்ளது குறிபிடத்தக்கது.  கடந்த சனியன்று வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றில் இதைப்பற்றி வெளியிட்டுள்ள கருத்தில், கொரோனா தடுப்பு மருந்தை, அடுத்த ஆண்டில் நாட்டில் உள்ள அனைவருக்கும் கொண்டு சேர்க்க தேவையான 80 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசிடம் உள்ளதா என்ற அடுத்த சவால், நம்முன்னே காத்திருக்கிறது. அதற்கான தெளிவான திட்டம், நம்மிடையே இருக்க வேண்டும். எனவே, இந்த கேள்வியை கேட்கவேண்டியுள்ளது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.