ஒரே வாரத்தில் 81,000 பேருக்கு சென்னை மாநகராட்சி இ-பாஸ்!

சென்னை: தமிழகத்தில் இ-பாஸ் விவகாரத்தில் அரசு சற்று தளர்வு கொடுத்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 81 ஆயிரம்  பேருக்கு சென்னை மாநகராட்சி  இ.பாஸ் வழங்கி உள்ளதாக  தெரிவித்துள்ளது

தமிழகத்தில் இ.பாஸ் பெறும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்ட பிறகு சென்னை நோக்கி வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த ஒரு வாரத்தில் 81 ஆயிரம் இ.பாஸ் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர்கள், அரசின் வழிகாட்டுதல்படி 7 முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்படுகின்றனர் எனவும் மாநகராட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வெளி மாவட்டங்களில் இருந்து வருவோரின் எண்ணிகை அதிகரித்துள்ளதால், சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்தியஅரசு, இ-பாஸ் நடைமுறையை முற்றிலும் அகற்ற வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.