82 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை: 10ஆயிரம் மருத்துவ இடங்கள் வீணான பரிதாபம்

டில்லி:

நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் உள்கட்டமைப்பு சரியில்லாத 82 மருத்துவக்கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக 10ஆயிரம் மருத்துவ மாணவர்களுக்கான இடங்கள் வீணாகி உள்ளது.

மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், விரைவில் மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் நடைபெற உள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள 82 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக்கல்லூரிகளுக்கான விதிமுறைகளின்படி, மருத்துவ கல்லூரிகளின் தரம், மருத்துவமனை வசதி, போதிய அளவிலான மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள்,  போதிய இட வசதி, உள் கட்டமைப்பு வசதிகள்  போன்றவை இல்லாத 12 அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் 70 தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இந்த ஆண்டு (2018)  மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்ததை தொடர்ந்து   உள்கட்டமைப்பு இல்லாத  மருத்துவ கல்லூரிகளில் 2018-19-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுமு.

இந்த 82 மருத்துவக்கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தடை செய்யப்பட்டதன் காரணமாக 10ஆயிரம் மருத்துவ இடங்கள் வீணாகி உள்ளது. இதன் காரணமாக மருத்துவம் படிக்க விரும்பிய 10 ஆயிரம் மாணவர்களின் கனவும் கலைந்துபோய் உள்ளது.

அதேவேளையில், புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்க அனுமதி கோரி  மாநில அரசுகள் தரப்பில் இருந்து 31 விண்ணப்பங்களும், தனியார் மூலம் 68 விண்ணப்பங்களும்  வந்திருந்ததாகவும், ஆனால், அவற்றை மத்திய சுகாதார அமைச்சம்  பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்தாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.