கோயம்புத்தூர்: தமிழ்மொழியின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக, கோவையைச் சேர்ந்த தமிழறிஞர் ஒருவர், கடிகாரம் தயாரித்து வித்தியாசமான முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.

மாரியப்பன் என்ற பெயர் கொண்ட 82 வயதான அந்த தமிழறிஞர், சுமார் 3000 ஆண்டுகள் பழமையான தமிழ் எழுத்துக்களைக் கொண்டு சுவர் கடிகாரம் தயாரித்துள்ளார். இதை அவர் வணிக நோக்கத்திற்காக தயாரிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

“இன்றைய ‍சூழலில் இந்திய மண்ணில் தமிழ் மொழியையும் அதன் இலக்கியத்தையும் பாதுகாக்கும் நோக்கத்திலேயே இந்த கடிகாரத்தை தயார் செய்துள்ளேன். இன்றைய நிலையில் தமிழ் மொழி பல்வேறு ஆபத்துகளுக்கு உட்பட்டுள்ளது.

தமிழ் இலக்கியங்களிலிருந்து கேட்கப்படும் சில குறிப்பிட்ட ‍கேள்விகளுக்கு சரியான பதிலளிக்கும் நபர்களுக்கு இந்த கடிகாரத்தை பரிசாக வழங்குவேன். இந்தக் கடிகாரம் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் எழுத்துக்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும்” என்றார்.