சென்னை:

மிழகத்தில் இன்னும் ஓராண்டுக்குள் மேலும் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக  போக்கு வரத்துத்துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மாசு கட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்யவும், உபயோகப்படுத்தவும் மத்திய மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன. தமிழகத்தில் முதன்முறையாக கடந்த மாதம் (ஆகஸ்டு 2019)  26ந்தேதி குளிர்சாதன வசதியுடன் கூடிய மின்சாரப் பேருந்து சேவையை தமிழக முதல்வர் பழனிசாமிச்சாமி  தொடங்கி வைத்து, அதில் பயணம் செய்தார்.

இந்த நிலையில்,  கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக  போக்கு வரத்துத்துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் இன்னும் ஓராண்டுக்குள் மேலும் 820 மின்சார பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படும் என்று கூறினார்.

மேலும்,  போக்குவரத்துத்துறை ஓய்வூதியதாரர்களுக்கான, ஓய்வூதிய பலன், ஆயிரத்து 97 கோடி ரூபாயை, இந்த வாரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியவர்,  திருத்தப்பட்ட போக்குவரத்து சட்டத்தில் அபராதம் குறைக்கப்படுவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, விரைவில் அரசாணை வெளியிடுவார் என்றும் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.