டெல்லி:

ந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 83 சதவிகிதம் பேர் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களின் வயது விவரங்களை வெளியிட்டு உள்ளது.

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பி முதியோர்களுடையே அதிகமாக காணப்பட்ட நிலையில், இந்தியாவில் 50 வயதுக்கு உட்பட்டவர்களிடையேதான் அதிகரித்து காணப்படுகிறது. இந்தியாவில், நாடு முழுவதும் கொரோனாவைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,500க்கும் அதிகமாக உள்ளது.மேலும் பலியானோரின் எண்ணிக்கை 50க்கும் மேலாகி உள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது,

கொரோனா வைரஸ் பாதிப்பு, 20 வயதுக்குட்படவர்களிடையே 9 சதவீதம்

 21-40 வயதுக்குட்பட்டவர்கள் 41 சதவீதம் பாதிப்பு. (21 -40 வயதுக்குட்டபவர்கள் எண்ணிக்கை அதிகம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது)

41-50 வயதுக்குட்பட்டவர்களில் 33 சதவீதம் 

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான பாதிப்பு 17 சதவீதம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இதில் கணக்கெடுப்பின்படி பார்த்தோமானால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு இளந்தலைமுறையிரேதான் அதிக அளவு உள்ளது தெரிய வந்துள்ளது.

அதாவது, 50 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் சுமார் 83 சதவிகிதம் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர் என்பது அதிர்ச்சியளிக்கிறது.