பதஞ்சலி நிறுவனத்தின் 83 ஊழியர்களை தொற்றிய கொரோனா வைரஸ்!

புதுடெல்லி: பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் பல்வேறு யூனிட்டுகளில் பணிபுரியும் 83 ஊழியர்களுக்கு, கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிரபலமான யோகா பயிற்சியாளராக அறியப்படுபவர் பாபா ராம்தேவ். தற்போது மோடியின் பாஜக அரசில், இவருக்கு செல்வாக்கு மிக அதிகம். இவரது பதஞ்சலி நிறுவனம் பல்லாயிரம் கோடிகளுக்கு வர்த்தம் செய்து வருகிறது.

அதேசமயம், இவரது நிறுவன தயாரிப்புகளில் பலவற்றின் மீது சர்ச்சைகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், அனைத்து தரப்பாரும் வைரஸ் தொற்றால் வேறுபாடின்றி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் பல்வ‍ேறு யூனிட்டுகளில் பணிபுரியும் ஊழியர்களில் 83 பேருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.