தூத்துக்குடி :

யிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வரும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி இன்று 12 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அந்த பகுதி மக்களின் போராட்டம் இன்று 83வது நாளாக தொடர்ந்து வருகிறது.

கேன்சர், மூச்சுத்திணறல், சிறுநீரக பிரச்சினை  போன்ற பல்வேறு வகையான  உயிர்கொல்லி நோய்களை உருவாக்கி வரும், ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

 

இந்நிலையில் இன்று 12 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உயிர்பலிகளை காவு வாங்கி வரும் நஞ்சு நிறைந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தூத்துக்குடி பகுதி மக்கள்  கட்சி, மதம், இன வேறுபாடு பார்க்காமல்  ஒன்றிணைந்து போராடி வருகின்றனர்.

ஏற்கனவே 2013ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதி அதிகாலை ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இருந்து வெளியான சல்பர்டை ஆக்சைடு காற்றில் கலந்தது. இந்த விஷக்காற்றை சுவாசித்த மாநகர மக்கள் கண் எரிச்சல், நெஞ்சு எரிச்சல், மூச்சுத்திணறல், சுவாசக்கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளானதாக  சுற்றுச்சூழல் ஆய்வகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.