திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 85 பேருக்கு கொரோனா

திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 85 பேருக்கு கொரோனா தொற்று  உறுதியான நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,376ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலில்  சென்னை முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் தொற்று பரவல்  தீவிரமடைந்து வருகிறது.

தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் புதிதாக 2115 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மொத்தம், 54,449 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (19ந்தேதி) மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2291 ஆக உயர்ந்திருந்தது. இந்த நிலையில், இன்று  மேலும் 85  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2376 ஆக உயர்ந்துள்ளது.

கார்ட்டூன் கேலரி