டில்லி,

ருத்துவ படிப்பில் 85% இடஒதுக்கீட்டை எதிர்த்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் மதுத்துவ படிப்பில் சேர விரும்புவர்கள் நீட் எனப்படும் மருத்துவ நுழைவு தேர்தல் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இந்த மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டது.

இதையடுத்து,  நீட் தேர்வில் பங்கேற்ற தமிழக பள்ளி பாட திட்ட மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஏற்கனவே கடந்த 4ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது,   மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழக மாணவர்களுக்கு 85 சதவிகித இடஒதுக்கீடு குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

அதைத்தொடர்ந்த இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,  மருத்துவ படிப்பில் 85% இடஒதுக்கீட்டில் தமிழக மனுமீது எந்தவிதமான தீர்ப்பும் கூற மறுத்துவிட்டது.

மேலும் தமிழக அரசின், மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு தமிழக அரசு வழங்கி உள்ள 85 சதவீதம் இடஒதுக்கீடு நீட்தேர்வை பாதிக்காது என்று கூறி உள்ளது.

நீட் தேர்வு முறையை பாதிக்கும் வகையில், தமிழக அரசின் அரசாணை இல்லை எனவும் கூறி உள்ளது.

மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கை மற்றும் கவுன்சிலிங்கிற்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்தது.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டை அணுகும்படியும் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி, தமிழக அரசின் உள்ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

சிபிஎஸ்இ மாணவர்கள் சார்பாக. தமிழக மாணவர்களுக்கு எதிராக  சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் வாதாடியது குறிப்பிடத்தக்கது.