மும்பை,

மும்பை பல்கலைக்கழக முதல் ஆண்டு தேர்வில் 85% மாணவர்கள் தோல்வியடைந்துள்ளர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை பல்கலைக்கழகத்தின் கீழ் பல்வேறு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. நடைபெற்று முடிந்த முதலாண்டு கல்லூரி செமஸ்டர் தேர்வில் 85 சதவிகித மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்து உள்ளனர்.

இது பெற்றோர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இதுகுறித்து மாணவர்கள் கல்லூரி பாடத்திட்டங்கள் சரியாக தெரிவிக்கப்படவில்லை என்றும், பாடங்கள் மாற்றப்பட்டுள்ளது பற்றியோ, பரிசோதனை விவரங்கள் பற்றியோ பல்கலைக்கழகம் தெளிவாக அறிவிக்கவிலை என்று 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் குறை கூறி உள்ளனர்.

புதிய பாடத்திட்டத்தின்படி பாட புத்தகங்களும் வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளனர்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.